
ஜோகூர் பாரு – ஆகஸ்ட் 23 – இன்று காலை வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் (PLUS), ஜோகூர் முவாரை நோக்கி செல்லும் வழியில் கிலோமீட்டர் 129.9 இல் 11 வாகனங்கள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்தில் ஐந்து லாரிகள், ஐந்து கார்கள் மற்றும் ஒரு வேன் உள்ளிட்ட மொத்தம் 11 வாகனங்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இவ்விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதென்றும் நெடுஞ்சாலையின் இடது மற்றும் வலது வழித்தடங்கள் முற்றிலும் மூடப்பட்ட நிலையில், அவசர பாதை வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.