Latestமலேசியா

தெலங்கானாவில் ஊசி செலுத்திய பின் 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

தெலங்கானா, ஆகஸ்ட் 11 – தெலங்கானாவில், சளி மற்றும் காய்ச்சலுக்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற 14 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர் கையில் ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவரின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணமென மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும், சம்பவத்தின்போது மருத்துவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மருத்துவர் தலைமறைவாகியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!