Latestமலேசியா

தெலுக் இந்தானில் காற்பந்து விளையாட்டில் தகராறு, 5 ஆடவர்கள் கைது

தெலுக் இந்தான், ஆகஸ்ட்-11 – தெலுக் இந்தான் Speedy காற்பந்து மைதானத்தில் நடைபெற்ற காற்பந்து போட்டியின் ஆட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் நாளைவரை தடுத்துவைக்கும் உத்தரவை தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஜைனால் அபிடின் தெரிவித்தார்.

சமூக வலைத்தலங்களில் வைரலான இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட 20 முதல் 30 வயதுடைய அந்த ஐந்து சந்தேகப் பேர்வழிகளுடன் இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த கலவரம் தொடர்பாக இதற்கு முன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்த 21 மற்றும் 31 வயதுடைய இதர ஏழு சந்தேகப் பேர்வழிகள் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கலவரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜைனால் அபிடின் தெரிவித்தார். ஹிலிர் பேரா 2025 ஒருங்கிணைந்த லீக் போட்டியில் Padang Tembak FC மற்றும் Jenderata FC குழுவுக்குமிடையிலான ஆட்டத்தின் பிற்பகுதியில் அந்த  கலவரம் மூண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!