Latestமலேசியா

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச ரயில் பஸ் சேவைகள் – அந்தோனி லோக்

கோலாலம்பூர், ஜன 13 – இம்மாதம் 24ஆம்தேதி மற்றும் 25ஆம்தேதி கொண்டாடப்படும் பத்துமலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக KTM Komuter கூடுதல் ரயில் சேவையை வழங்கவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார். கிள்ளான் பள்ளத்தாக்கில் கே.டி.எம் (Comuter) மின்சார ரயில் சேவை 4 நாள் முன்று இரவு என 24 மணிநேரம் சேவையை வழங்கவிருக்கிறது. ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 26 ஆம் தேதி வரை 24 மணி நேரம் பத்துமலைக்கான KTM Comuter ரயில் சேவை இருக்கும் என அந்தோனி லோக் தெரிவித்தார். மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பத்துமலைக்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வசதியாக இலவச கே.டி.எம் Comuter ரயில் சேவை ஜனவரி 24ஆம் தேதியும் முதல் ஜனவரி 25ஆம் தேதி வரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று பட்டர்வெர்த் – கோலாலம்பூர் சென்டரல் மற்றும் பாடாங் பெசார் – கோலாலம்பூர் சென்டரலுக்கான கூடுதல் ETS கூடுதல் ரயில் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தோனி லோக் கூறினார்.

பத்துமலையில் தைப்பூச கொண்டாட்டத்திற்காக முன்னேற்பாடு நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் முதல் முறையாக பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்து பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். இதற்கு முன்னதாக பத்துமலை திருத்தலத்தில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில் பத்துமலையில் அந்தோனி லோக்கிற்கு சிறப்பு செய்யப்பட்டது. நாட்டில் தைப்பூசம் கொண்டாடப்படும் முன்னணி திருத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக பொது போக்குவரத்து வசதியை போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவில் இவ்வாண்டும் அதிகமான பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் நாடு முழுவதிலும் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிவார்கள் என என்பதால் ரேப்பிட் கே.எல் நிறுவனத்தின் ஏற்பாட்டின் மூலம் பத்துமலை மற்றும் பினாங்கிலும் கூடுதல் இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பத்தர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!