கோலாலம்பூர், பிப் 6 – இன்று பத்துமலை திருத்தல வளாகத்திற்கு தாம் மேற்கொண்ட வருகையின் மூலம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளை நேரடியாக பார்வையிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த வருகை ஒரு அடையாளமாக மட்டுமின்றி கலாச்சார ரீதியாகவும், சமய ரீதியாகவும் நட்புறவு கொண்ட மலேசியா எப்படி நீண்ட காலமாக ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறது என்ற பன்முகத்தன்மையில் நாம் வலிமையைக் காண்கிறோம் என்பதையும் இங்கே வலியுறுத்த விரும்புவதாக அன்வார் தெரிவித்தார்.
வேற்றுமைகளில் ஒற்றுமையை உருவாக்கும் பன்முகத்துவ தூண்களின் அடிப்படையில் மலேசியா ஒரு வலுவான மற்றும் கட்டொழுங்கான நாடாகவும் மலர வேண்டும்.
நாட்டை நேசிக்கும் புத்திசாலித்தனமான குடிமக்கள் என்ற வகையில், இந்த நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், பிரிவினையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிக்கும் பொறுப்புணர்வை நாம் கொண்டிருக்க வேண்டும் .
இந்த வேளையில் இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டம் அனைத்து இந்துக்களுக்கும் மகிழ்ச்சியைத் தரட்டும் என தனது முகநூலில் அன்வார் பதிவிட்டுள்ளார்.