
கோலாலம்பூர், நவ 17 – 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 ஆம்தேதி மாலை மணி 5.30 அளவில் செனவாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியின் தொழுகை மையத்தில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இஸ்லாமிய கல்வி ஆசிரியருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
47 வயதான பரித் அசார் நவி ( Farid Azhar Nawi ) என்ற அந்த நபருக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஏகா காலத்தில் இந்த தண்டனை தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனைக் காலத்தில் அவருக்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை வழங்கவும் , சிறைத்தண்டனை முடிந்த பிறகு ஒரு ஆண்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென நீதிபதி சுரியா புடின் ( Suria Budin ) உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக வழக்கில் சந்தேகத்தை எழுப்புவதற்கு எதிர்தரப்பு தவறிவிட்டதால் இந்த தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.



