
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர் ஜாலான் பெசார் கெப்போங்கில் வாகனமோட்டும் போதே, 45 வயது மாது தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 10.30 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவர் தனது கைகளையும் கழுத்தையும் கத்தியால் வெட்டிக் கொண்டார்.
பிறகு ஒரு மோட்டார் சைக்கிளை இடித்து, சமிக்ஞை விளக்குப் பகுதி அருகே சாலைத் தடுப்பில் அவரின் கார் மோதி நின்றது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை, செந்தூல் OCPD துணை ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari உறுதிப்படுத்தினார்.
சவப்பரிசோதனை இன்று நடைபெறுகிறது.
சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக WhatsApp வயிலாக தனது கணவருடன் அவர் பேசியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அச்சம்பவவத்தின் வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.