Latestமலேசியா

நஜீப் வீட்டுக் காவலுக்கான விதிமுறைகள் இறுதிக்கட்டத்தில்; RM50 மில்லியன் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை

கோலாலம்பூர், அக்டோபர்-19,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கான விதிமுறைகள் இறுதிச் செய்யப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அதற்கான முக்கிய நிபந்தனையான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜீப் இன்னும் செலுத்தவில்லை என்பதால், அவர் தொடர்ந்து காஜாங் சிறையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

மலேசியாவில் வீட்டுக் காவல் நடைமுறை இதுவரை அமுல்படுத்தப்படாததால், அதற்கான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் சிறைச்சாலை இலாகா தற்போது வகுத்து வருவதாக சைஃபுடின் விளக்கினார்.

கடந்த மாதம், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனையுடனான பொது மன்னிப்பின் அடிப்படையில், SRC International வழக்கில் நஜீப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதற்கு முன்னதாக 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதுடன், சிறைச்சாலை இலாகா விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் அவர் பூர்த்திச் செய்ய வேண்டும்.

எனவே, இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே நஜீப்பை வீட்டுக் காவலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!