செப்பாங், டிசம்பர்-20 – ஐக்கிய அரசு சிற்றரசின் அபு தாபியிலிருந்து கோலாலம்பூருக்கான விமானப் பயணத்தின் போது, பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததை, மொரோக்கோ நாட்டு மாணவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
16 வயது அம்மாணவன் மீது சிலாங்கூர், செப்பாங், மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், பதின்ம வயது என்பதால், அவனது ஒழுக்கம் குறித்த சமூக நலத் துறையின் அறிக்கை கிடைத்தப் பிறகு, அடுத்தாண்டு பிப்ரவரி 19-ல் அவனுக்கான தண்டனை அறிவிக்கப்படுமென நீதிபதி கூறினார்.
டிசம்பர் 18-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நடுவானில் 26 வயது மலேசியப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.