
ரானாவ், பிப்ரவரி-26 – சபாவில், நேற்று காலை கினாபாலு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும் போது 70 வயது பிரிட்டிஷ் மலையேறி மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
அம்முதியவர் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அடுத்து உடனிருந்தோர் அவசர உதவிக் கோரினர்.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புக் குழுவும் மருத்துவக் குழுவும் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து கீழே தூக்கிக் கொண்டு வந்தது.
எனினும் அடிவாரத்தை அடையும் முன்பே அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.