
தோக்யோ, மார்ச் 3 – 30 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அளவிலான காட்டுத் தீயை அணைப்பதற்கு 1,700 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
மோசமான காட்டுத் தீயினால் சுமார் 4,600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர். கடந்த வாரம் ஜப்பானின் வட கிழக்கு Iwate வட்டாரத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஒருவர் மரணம் அடைந்தார்.
காட்டுத் தீ காரணமாக அந்த வட்டாரத்தில் குறைவாக மழை பொழிந்ததோடு ஜப்பான் முழுவதும் கடந்த ஆண்டு வெப்பமான சீதோஷ்ண நிலை பதிவாகியது.
வியாழக்கிழமை முதல் ஏற்பட்டு வரும் காட்டுத் தீயினால் Oftunato நகருக்கு அருகே 2,100 hectares பகுதி அழிந்ததாக தீ மற்றும் பேரிடர் நிர்வாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தோக்யோ உட்பட ஐப்பானின் 14 வட்டாரங்களைச் சேர்ந்த தீயணைப்புப்படை வீரர்கள் 16 ஹெலிகாப்டர்களின் துணையோடு தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு ராணுவ வீரர்களும் உதவி வருகின்றனர். நேற்றுவரை 84 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு அவற்றின் இழப்பு குறித்து இன்னமும் மதிப்பிடப்பட்டு வருகிறது, ஏற்கனவே அந்த பகுதியிலிருந்து 2,000 பேர் வெளியேறியுள்ளனர்.