Latestமலேசியா

நன்கொடை திரட்டும் அனுமதியை ரமலான் சந்தையில் தவறாக பயன்படுத்தினர் – மூவர் கைது

சுங்கைப் பட்டாணி,பிப்ரவரி-26- சுங்கைப் பட்டாணியில் விஸ்மா ரியா ரமலான் சந்தைத் தளத்தில் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளை வசூலித்து, தங்கள் பணி வருகை அட்டைகளை தவறாகப் பயன்படுத்தியதாக மூன்று வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு தாய்லாந்து ஆடவர்களும் ,மியான்மரைச் சேர்ந்த 39 வயது ரோஹிங்கியா பெண்ணும் சுங்கை பட்டாணி போலீஸ் நிலைய பணிக்குழு உறுப்பினர்களால் மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

சோதனையின் போது, ​​ஆதரவற்ற பிள்ளைகளுக்கான சமயப் பள்ளி கட்டுமானம் மற்றும் மசூதி தள அறக்கட்டளைக்கு அந்த மூவரும் நன்கொடை திரட்டியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் நன்கொடை மூலம் திரட்டப்பட்ட 300 ரிங்கிட் ரொக்கத்தையும் போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!