நீதிபதிக்கு மிரட்டல்: முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-12-கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய வழக்கில், அவரது முன்னாள் ஓட்டுநருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
39 வயதான Mohd Fareez Mohd Zin, தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றி குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கடந்த மே மாதம், நீதிபதி
Gan Techiong-கின் செயலாளருக்குத் தொலைபேசி மூலமாகவும், வாட்சப்பில் இரண்டு ஒலிப்பதிவுகள் மூலமாகவும் Fareez மிரட்டல் விடுத்தது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
நீதித்துறை பாதுகாப்பை உறுதிச் செய்யவும் எச்சரிக்கையாக இருக்கவும் உரிய தண்டனை வழங்க வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு பிரதிவாதி வழக்கறிஞர் கோரினார்.
அனைத்தையும் கருத்தில் கொண்ட மேஜிஸ்திரேட்
Heng Yi Min இந்த 3 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.



