Latestமலேசியா

நீதிமன்ற வளாகத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தை DAP ஏற்கவில்லை

கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணை அமைச்சர்
எம். குலசேகரன், சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமியை ( Dorasamy )
சந்தித்த செயலை டி.ஏ.பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி ஏற்கவில்லை.

DAP யின் மூன்று உச்ச மன்ற உறுப்பினர்களான ஷேக் உமர் பகாரிப் அலி, ( Sheikh Umar Bagharib Ali ) யங் சைபுரா ஒத்மான் ( Young Syefura Othman ) ஷரெட்ஸான் ஜோஹான் ( Syahredzan Johan ) மற்றும் , புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷித்தும் ( Syerleena Abdul Rashid ) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

டிஏபியின் மூத்த உறுப்பினரான குலசேகரனின் இந்தச் செயல், குறிப்பாக நாட்டின் சட்ட அமைப்பின் நேர்மை தொடர்பான பொது விவாதங்களைத் தூண்டியுள்ளது என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அருண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தபோது, ​​ அவரை மதானி அரசாங்கத்தின் துணை அமைச்சர் பதவியில் இருந்துவரும் ​​குலசேகரன் சந்தித்ததை தாங்கள் முற்றிலும் ஏற்கவில்லை என அந்த நால்வரும் தெரிவித்தனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!