நீலாய் , ஜன 16 – நீலாயிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த வாரம் ஆயுதம் ஏந்திய நான்கு ஆடவர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அழைக்கப்பட்ட 14 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden அப்துல் மாலேக் (Abdul Malik Hasim ) கூறினார். அவர்களில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது நண்பர்களும் அடங்குவர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளையும் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அந்த உணவகத்தின் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். ஜனவரி 9 ஆம் தேதி இரவு மணி 9.40 அளவில் ஒரு வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த ஐவர் அடங்கிய கும்பல் அந்த உணவகத்தின் உள்ளே அமர்ந்திருந்த 44 முதல் 59 வயதுயை உள்நாடடைச் சேர்ந்த நான்கு ஆடவர்களை தாக்கியதாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியாகின. தண்டனைச் சட்டத்தின் 326ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல் மாலேக் தெரிவித்தார்.