
ஜெம்போல், ஜூலை-14- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் ஒரு பேரங்காடியிலிருந்து 41 ரிங்கிட் மதிப்பிலான தலா 2 பேக்கேட் கருப்பு மிளகு sauce மற்றும் மயோனிஸை திருடியதற்காக, பதின்ம வயது பையன் கைதுச் செய்யப்பட்டான்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது. முதுகில் பை ஒன்றை மாட்டிக் கொண்டு உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தவன் மீது சந்தேகம் கொண்ட பாதுகாவலர், முன்னதாக அவனைப் பிடித்து தடுத்து வைத்துள்ளார்.
இதையடுத்து, அப்பையனின் பெற்றோர் என நம்பப்படும் ஒரு தம்பதி, சந்தேக நபரை விடுவிக்குமாறு பாதுகாவலரிடம் பிரச்சனை செய்தனர்; இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் Toyota Avanza காரிலேறி தப்பியோடினர். எனினும் 15 வயது பள்ளி மாணவனான அப்பையன், சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு கைதுச் செய்யப்பட்டான்.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டு போலீஸ் உத்தரவாதத்தில் பின்னர் அவன் விடுவிக்கப்பட்டான்.
மேல் கட்ட நடவடிக்கைக்காக, விசாரணை அறிக்கை அரசு தரப்புத் துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அனுப்பப்படுமென ஜெம்போல் போலீஸ் கூறியது.