
கோலாலம்பூர், ஏப்ரல்-5 – கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை இன்று கடும் நெரிசலைச் சந்தித்துள்ளது.
சொந்த ஊர்களில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி விட்டு ஏராளமான மக்கள் மாநகரத்துக்குத் திரும்புவதே அதற்குக் காரணம்.
காலை முதலே சாரை சாரையாக வாகனங்கள் நெடுஞ்சாலைக்குள் நுழைவதால், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெரிசல் நீடிக்கிறது.
மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அதனை உறுதிப்படுத்தியது.
திங்கட்கிழமை வேலை தொடங்குவதால் நாளை இரவு வரை இந்நிலை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக LLM கூறிற்று.