
கோலாலம்பூர், ஜன 23 – பயணிகளின் பயண மாற்றங்களை பூர்த்தி செய்யும் வகையில் நோன்பு மாதம் முழுவதிலும் பரபரப்பான வேளையில் ரயில் சேவையின் நேரத்தை ரெப்பிட் ரயில் சென்ட் பெர்ஹாட் ( Rapid Rail Sdn Bhd) நீட்டிக்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார்.
சாதாரண மாதத்தில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை இருந்த ரயில் சேவை நேரம் நோன்பு மாதத்தில் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நீட்டிப்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.
மேலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை இதற்கு முன் இருந்த ரயில் சேவை நேரம் தற்போது தற்போது மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுமூகமான சேவையை உறுதி செய்வதோடு, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக நோன்பு திறக்கத் தயாராவதற்கு முன்கூட்டியே திரும்பும் பயணத்தின் போது பயணிகளின் நடவடிக்கை இதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று மக்களவையில் கேள்வி பதில் அமர்வின்போது அந்தோனி லோக் இத்தகவலை வெளியிட்டார்.
நோன்பு மாதத்தின் சேவை இடையூறுகளுக்கான தயார் நிலை குறித்து வினவப்பட்டபோது, இந்த விவகாரம் எல்லா நேரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ரமலான் மாதத்திற்கு மட்டும் அல்ல என்று லோக் மறுமொழி தெரிவித்தார் .



