
கோலாலம்பூர், அக்டோபர்-15,
கடந்த இரண்டு ஆண்டுகளில் பகடிவதை சம்பவங்களைப் பதிவு செய்த பள்ளிகள் தங்கள் விடுதிகளில் (CCTV) எனப்படும் ரகசிய கண்காண்ப்பு கேமராக்கள் பொருத்தப்படும் முதல் பள்ளிகளாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் ( Fadhlina Side) தெரிவித்தார்.
இந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம்தேதி முதல் அமைச்சின் கீழ் உள்ள 200 பள்ளிகளின் தங்கும் விடுதிகளில் CCTV கேமராக்களை பொருத்துவதற்கு கல்வி அமைச்சு 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் பட்லினா குறிப்பிட்டார்.
பள்ளிகளின் தேவை மற்றும் சாத்தியமான சிக்கல் போன்ற விவரங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவதற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பகடிவதை விவகாரங்களின் பதிவு எண்ணிக்கை , அதிகமான மாணவர்கள் என்ற விவரங்களோடு ஏற்கனவே சிசிடிவி பாதுகாப்பு இல்லாததா அல்லது போதுமான பாதுகாப்பு இல்லையா ஆகியவை அளவுகோல்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். பொதுப்பணித் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் மின்சாரம் மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பின் தயார்நிலை, தலைமை அரசு பாதுகாப்பு அதிகாரி (CGSO) அலுவலகத்திலிருந்து கேமரா பொருத்துதல் குறித்த தள சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை ஆகியவையும் இதில் அடங்கும்.
மாணவர் பாதுகாப்பு பிரச்சினைகள், குறிப்பாக விடுதிகளில் பகடிவதை விவகாரம் இருந்தால் அதற்கு அமைச்சு முன்னுரிமை வழங்கும் என்றும் பட்லினா சுட்டிக்காட்டினார்.