Latestமலேசியா

பங்குகள் விவகாரம்: சிறப்பு குழுவிடம் வாக்குமூலம் அளித்தார் அசாம் பாக்கி

புத்ராஜெயா, பிப்ரவரி-22-தனியார் நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி சிறப்பு விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிப்ரவரி 19-ஆம் தேதி அழைக்கப்பட்ட அசாம் பாக்கியிடம் Velocity Capital Partner Sdn Bhd நிறுவனத்தில் அப்பங்குகளை 1.416 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் கூறினார்.

இந்த விசாரணைக் குழுவுக்கு சட்டத் துறைத் தலைவர் தான் ஸ்ரீ மொஹமட் டுசுக்கி மொக்தார் தலைமை தாங்குகிறார்.

விசாரணையில், பங்குகள் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சட்ட பின்பற்றல் விவகாரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மேலும் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று ஷம்சுல் குறிப்பிட்டார்.

ஒரு விரிவான, வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் தொழில்முறையான விசாரணை நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

விசாரணையின் முடிவில், பரிந்துரையுடன் கூடிய முழு அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

அசாம் பாக்கியின் பங்குகள் விவகாரத்தை முன்னதாக அனைத்துலக செய்தி நிறுவனமான Bloomberg அம்பலப்படுத்தியது.

எனினும், அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், அவதூறு பரப்பியதாகக் கூறி அந்நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!