Latestமலேசியா

ஒரே கோலத்தில் 100 வர்ணம் – மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ரவாங்கைச் சேர்ந்த சிவபாலன்

கோலாலம்பூர், அக்டோபர் 21 – இந்தியர்களின் சுப நிகழ்ச்சிகள் என்றால் ரங்கோலி கோலங்கள் இல்லமால் இருக்க முடியாது.

வீடுகளில் தொடங்கிய இந்த கோலமிடும் கலாச்சாரம், இப்போது பண்டிகைகளை வரவேற்கும் விதமாக வணிக மையங்களிலும் இதன் வருகை பரவியிருக்கிறது.

அலங்காரத்தையும் தாண்டி, வர்த்தகமாக மாறிவருகின்ற இந்த ரங்கோலி கோலங்களில், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களின் அசதாராண திறமையால் அசத்தி வருகின்றனர்.

அவ்வகையில், Creation Event Planner மற்றும் Life Creation Rangoli Kolam நிறுவனத்தின் தோற்றுநரான சிவபாலன், ஒரே ரங்கோலி கோலத்தில் அதிக வண்ணங்களைப் பயன்படுத்தி மலேசியச் சாதனை புத்தகத்தில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.

மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு, NU Sentral-லில் இரண்டு நாட்களில் உருவாக்கப்பட்ட ரங்கோலி கோலத்தில், 150 கிலோ கிராம் அரிசியில், 100 வித்தியாசமான வண்ணங்கள் பயன்படுத்தி சாதனையை முறியடித்ததாக ரவாங்கைச் சேர்ந்த சிவபாலன் தெரிவித்தார்.

வண்ணமயமான விளக்குகள், மயில்கள் போன்ற பாரம்பரிய சித்திரங்களை உள்ளடக்கிய இந்த 20 மீட்டர் நீளத்திலும், 25 மீட்டர் அகலத்திலும் அமைந்த பிரம்மாண்டமான கோலம், பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

இதனிடையே, எவ்வாறு ரங்கோலி கோலத்தில் ஆர்வம் வந்தது என்று கேட்டால்….மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா? என்று வணக்கம் மலேசியாவிடம் சிவபாலன் இவ்வாறு கூறினார்.
Interview

தீபாவளிக்கு ரங்கோலி கோலமிடுபவர்களுக்கு இவர் துணுக்கு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

சமகால படைப்பாற்றலுடன் பாரம்பரிய கலையான கோலத்தையும், இந்த அழகிய கலாச்சார நடைமுறையையும், மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த சிவபாலனின் சாதனை பெருமைக்குரியதே.

இவருக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!