
ஜகார்த்தா, மே 6 – ஜகார்த்தாவில் பதவி உயர்வு கிடைக்காததால் அரசு ஊழியர் ஒருவர் தான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தீ வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி பங்கா பெலிதுங் எனும் இடத்தில் 43 வயதான அரசு ஊழியர் ஒருவர் தனது பதவி உயர்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் கோபத்தில் பணி புரிந்து வந்த போக்குவரத்து அலுவலகத்திற்குத் தீ வைத்துள்ளார்.
இச்செயலால் அவ்வலுவலகம் முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஒரு கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு அலுவலகத்திற்குச் சென்ற அவ்வாடவன் பிறகு மாலை 6 மணியளவில் எரிபொருளுடன் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத் தலைவரின் அறை ஜன்னலைத் திறந்து, மரச்சட்டத்திலும் சுவர்களிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.
அதுமட்டுமல்லாமல் அச்சம்பவத்தை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்தத்துள்ளான்.
இதனிடையே தனது உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த அவ்வாடவனை பின்னர் காவல் துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



