Latestமலேசியா

பத்துமலை மின் படிக்கட்டு அனுமதி விவகாரம்: உண்மை தெரியாமல் பேச வேண்டாம், பாப்பாராயுடுவுக்கு சிவக்குமார் கண்டனம்

கோலாலாம்பூர், ஜனவரி-6,

பத்து மலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு முன்வைத்த குற்றச்சாட்டை, கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவக்குமார் மறுத்துள்ளார்.

பாப்பாராயுடு உண்மை தெரியாமல் கருத்து கூற வேண்டாம் என சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்து மலை மேல்குகைக்கு மின் படிக்கட்டு அமைக்கும் திட்டத்திற்காக, தேவஸ்தானம் சார்பில் கோம்பாக் நில அலுவலகத்தில் முதலில் விண்ணப்பம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்…

INTERVIEW

ஆனால், நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் தேவஸ்தானத்திற்கு ROS பதிவு எண் இல்லாததால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நில அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், ஆலயத் தலைவர் பெயரில், நீதிமன்ற ஒப்புதலுடன் மீண்டும் விண்ணப்பம் செய்யப்பட்டதாக சிவகுமார் விளக்கினார்.

INTERVIEW

நிலைமை இப்படியிருக்க, தனிமனித பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டதாலேயே விண்ணப்பத்திற்கு இதுவரை அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என பாப்பாராயுடு கூறியிருக்கிறார்.

இது ஒரு தவறான கூற்று என சுட்டிக் காட்டிய சிவகுமார், தேவஸ்தான தலைவர் என்ற பொது சொத்தின் பொறுப்பின் அடிப்படையிலேயே விண்ணப்பம் செய்யப்பட்டதே ஒழிய, யாரோ ஒரு தனிதனிதனின் பெயரில் அல்ல என்றார்…

ஆக, இந்த விவகாரத்தில் தேவஸ்தானம் எந்தத் தவறும் செய்யவில்லை, அனைத்தையும் முறைப்படித்தான் செய்துள்ளது.

ஆரம்பத்திலேயே கோயில் பேரில் தானே விண்ணப்பித்தோம். அப்படி விண்ணப்பித்து ஒரு வருடம் ஆன பிறகும் இன்னும் ஏன் அனுமதி வழங்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்..

பலமுறை பேசி பார்த்து விட்டோம், தக்க பதில் கிடைக்கவில்லை; அதன் பிறகே வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு பேச்சுக்கு விண்ணப்பத்தில் பிரச்னை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்; இருந்தாலும் பத்து மலையின் சிறப்பை கருத்தில் கொண்டு, ஒரு சிறப்பு அனுமதியாகக் கொடுப்பதில் தவறில்லையே எனவும் சிவகுமார் கேட்டார்.

தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதன் முடிவைப் பொருத்தே அடுத்தக் கட்டம் பற்றி யோசிக்க வேண்டுமென, செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

பத்து மலை மேல் குறைக்கு செல்ல பக்தர்களுக்கு கூடுதல் வசதியாக மின்படிக் கட்டு கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!