Latestமலேசியா

பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி

பத்து காஜா தஞ்சோங் துவலாங்கில் கோர விபத்து; 3 வயது சிறுமி ஷாஸ்திகா உட்பட மூவர் பலி

பத்து காஜா , பிப்ரவரி 10-

ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் நேற்று இரவு இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பெரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்ற 34 வயதான எஸ். ஆர். சரளா தேவி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 65 ஙயமான ஜி. சரஸ்பதி கோபால் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் சபாரோட்ஸி நூர் அகமட் கூறினார்.நேற்று இரவு 9.45 மணியளவில் தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது, இந்த விபத்தில் பெரோடுவா மைவி மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர்.

பெரோடுவா மைவியின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கை பயணித்த இருவரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் ஆரம்பக்கட்ட ஆய்வை மேற்கொண்டு, சேவர் (SAVER) கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை வெளியே எடுக்க ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது மற்றும் மேலதிக நடவடிக்கைக்காக அவர்களின் உடல்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் மூலம் மூன்று வயது சிறுமி எஸ். ஷாஸ்திகா பத்து காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.மீட்பு நடவடிக்கை இரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கிடையில், 27 வயதான பிக்கப் வாகன ஓட்டுநர் தனது கை, கால்கள் மற்றும் முழங்கால்களில் காயமடைந்து சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!