
பத்து மலை, அக்டோபர்-13 – ஆதரவற்ற குழந்தைகளுடனான தீபாவளி கொண்டாட்டங்களை Dinamik Sinar Kasih Malaysia அல்லது DSK சமூக நலச் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும்.
பிள்ளைகள் முகத்தில் தீபாவளி குதூகலத்தைப் பார்ப்பது மனதுக்கு ஆத்ம திருப்தியை கொடுப்பதால், இது நிச்சயம் தொடரப்படுமென, அதன் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
தமிழ்ப் பள்ளியில் பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த 500 மாணவர்களுடன் பத்து மலையில் தீபாவளி கொண்டாடிய நிகழ்வில் அவர் அதனைத் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டுகளில் ஆதரவற்ற சிறார் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் DSK தீபாவளியைக் கொண்டாடியது.
இவ்வாண்டு புது முயற்சியாக, 500 மாணவர்களை பத்து மலைக்கே வரவழைத்து, அவர்களுடன் தீபாவளி குதூகலம் பகிரப்பட்டது.
மாணவர்களுக்கு பத்து மலை சுற்றிக் காட்டப்பட்டதோடு, அவர்களுக்கு கேளிக்கை விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
பின்னர் விருந்துபசரிப்போடு தீபாவளி அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
DSK அமைப்பின் இதுபோன்ற முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கும், அதன் தலைவர் தான் ஸ்ரீ ஆர் நடராஜாவுக்கும் இவ்வேளையில் சிவகுமார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.