
பந்திங், ஏப்ரல்-20, சிலாங்கூர் பந்திங்கில் ஆக்ரோஷமடைந்த ஆடவர் கூர்மையான ஆயுதத்துடன் பொது மக்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்திங் மருத்துவமனை அருகேயுள்ள ஓர் உணவகத்தில் சனிக்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.
தாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க அங்கிருந்தவர்கள் நாற்காலிகளைக் கேடயமாகப் பயன்படுத்தியதை, வைரலான 57 வினாடி வீடியோவில் காண முடிந்தது.
நிலைமைக் கைமீறி போவதைத் தடுக்க, பாதுகாவலர் அவ்வாடவரின் காலில் துப்பாக்கியால் சுட்டார்.
குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அக்மால் ரிசால் ரட்சி அச்சம்பவத்தை உறுதிபடுத்தினார்.
முழு அறிக்கை இன்று வெளியாகும் என அவர் சொன்னார்