Latestமலேசியா

பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை – MetMalaysia எச்சரிக்கை

கோலாலம்பூர்,மார்ச்-30-மலேசியா வானிலை ஆய்வு மையமான MetMalaysia தீபகற்ப மலேசியாவில் சில மாநிலங்களிலும் சபா சராவாக்கில் சில பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரையில் மின்னல் மற்றும் கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரெங்கானு, பஹாங், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவிலும் ஜோகூர், சபா மற்றும் சராவாக்கில் சில பகுதிகளிலும் கனமழை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வாகனத்தை கவனமாக செலுத்தவும், வெளிப்புற நடவடிக்கைகள் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!