Latestமலேசியா

பஹாங்கில் சாலையைக் கடந்த மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

பெரா, பிப்ரவரி-7 – பஹாங், குவாந்தானில், மாடு சாலைக்குள் புகுந்ததில் தோட்டத் தொழிலாளியான ஓர் ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றிரவு 8.55 மணியளவில் பெரா, ஃபெல்டா திரியாங் சத்துவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

25 வயது Muhammad Sulaiman Tahir, பெரா MRSM கல்லூரியிலிருந்து திரியாங் டுவா சாலைச் சந்திப்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.

அவர் ஓட்டிச் சென்ற Honda Dash மோட்டார் சைக்கிள், திடீரென சாலையைக் கடந்த மாட்டை மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட அவ்விளைஞர், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உடல் சவப்பரிசோதனைக்காக தெமெர்லோ சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!