பாசீர் மாஸ், ஜனவரி-10, கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் சாக்கார் சுங்கையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 2 மீட்டர் நீளமுள்ள முதலை, ஒருவழியாக வனத்துறையிடம் சிக்கியுள்ளது.
முதலையின் நடமாட்டம் குறித்து ஜனவரி 1-ம் தேதி புகார் கிடைத்ததும், அதைப் பிடிப்பதற்காக வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN அங்கு பொறி கூண்டுகளைப் பொருத்தியது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று காலை கூண்டில் முதலை சிக்கியது.
இதையடுத்து, குடியிருப்புக் பகுதிகளிலிருந்து தள்ளியிருக்கும் அசல் வாழ்விடத்தில் முதலை விடப்படுமென கிளந்தான் PERHILITAN இயக்குநர் Mohamad Hafid Rohani கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளந்தான் ஆற்றிலிருந்து அம்முதலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.