மலாக்கா, நவ 28 – மலாக்கா, மெர்லிமாவ், ஜாலான் கம்போங் ஸ்ரீ லஞ்சாங்கில் இன்று காலையில் கார் ஒன்று பாலத்தின் சுவரில் மோரி தீப்பிடித்ததில் அதில் இருந்த மூவர் கருகி மாண்டனர். காலை மணி 9 அளவில் தகவல் அறிந்தவுடன் மெர்லிமாவ் மற்றும் ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 11 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் கமாண்டர் முகமட் பாரிட்
( Mohamad Farid ) தெரிவித்தார்.
புரோட்டோன் ஈஸ்வரா கார் ஒன்று கவிழ்ந்தபின் பாலத்தின் சுவரில் மோதி தீப்பிடித்ததில் அக்காரின் 90 விழுக்காடு பகுதி எரிந்து கிடந்ததோடு அதில் சிக்கிக் கொண்ட மூவர் மரணம் அடைந்தததை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.