Latestமலேசியா

பாலியல் தொடர்பான தகராறில் காதலன் கொலை; 22 வயது பெண்ணுக்கு ஆறரை ஆண்டு சிறை

கோலாலம்பூர், அக் 28 –

ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் தொடர்பான தகராறில் தனது காதலனை கத்தியால் குத்தி மரணம் ஏற்படுத்திய 22 வயது பெண்ணுக்கு ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் ஆறரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம்தேதி ஜாலான் Austin Height ட்டிற்கு அருகேயுள்ள ஹோட்டல் அறையில் 29 வயதுடைய தனது காதலனுக்கு மரணம் விளைவித்தாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சம்பவம் நடந்தபோது 19 வயதாக இருந்த அப்பெண் தனக்கு மாதவிடாய் இருந்ததால் பாலியல் உறவுக்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது காதலன் தம்மிடமிருந்த கத்தியால் மிரட்டியதால் தனது பாதுகாப்பை கருதி அந்த கத்தியை அப்பெண் பிடுங்க முயன்றபோது ஒரு முறைக்கும் மேல் அக்கத்தி அந்த ஆடவனின் நெஞ்சில் குத்தப்பட்டதால் அவர் மூர்ச்சையற்று கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்குள் உள்ளான அப்பெண் உடனடியாக தனது தாயாருக்கு அழைத்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த அப்பெண்ணின் தாயாரும் அவது தந்தையும் அந்த ஆடவன் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசிற்கு போலீசிற்கு தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட அப்பெண் மீது பின்னர் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது விதியின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை நோக்கமில்லா மரணம் ஏற்படுத்தியதாக குறைப்பதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு குற்றவியல்
சட்டத்தின் 304 ஆவது விதியின் கீழ் ஆறறை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி Kan Weng Hin தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!