Latestமலேசியா

பாலேக் பூலாவில் சாலையின் நடுவே சறுக்குப் பலகையில் சாகசம்; வைரலான நபருக்கு போலீஸ் வலை வீச்சு

பாலேக் பூலாவ், செப்டம்பர் -7 – சாலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சறுக்குப் பலகையில் (surfboard) சாகசம் புரிந்த நபரை பினாங்கு போலீஸ் தேடி வருகிறது.

வைரலான 47 வினாடி வீடியோவைப் பார்த்தால், பாலேக் பூலாவ், ஜாலான் பாரு மலைப்பாதையில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அந்நபரின் செயல் அவருக்கு மட்டுமல்ல, சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் ஆபத்தைக் கொண்டு வரலாம் என பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் Kamarul Rizal Jenal கூறினார்.

சாலைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் micro-mobility வாகனங்கள் பயன்பாட்டுக்கு தடையிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, அச்சட்டப் பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோரும் போலீசை தொடர்புகொண்டு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!