Latestமலேசியா

பாஸ் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலில் இணைவது குறித்து மஇகா உறுப்பினர்களுடன் மீண்டும் கருத்து கேட்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-2 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர ம.இ.கா முன்பு விருப்பம் தெரிவித்த போது, அதன் தலைவராக இருந்தவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின்.

ஆனால், இப்போது பாஸ் கட்சியின் கைகளுக்கு PN தலைமை மாறியுள்ளது; எனவே அக்கூட்டணியில் இணையும் தீர்மானத்தை மீண்டும் ம.இ.காவின் அடிமட்ட தொண்டர்களிடம் எடுத்துச் சென்று கருத்துக் கேட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பெரிக்காத்தானில் இணைய விண்ணப்பித்து, அது அங்கீகரிக்கப்பட்டும், ம.இ.கா தாமதம் காட்டுவதாக எழுந்துள்ள பேச்சுகள் தொடர்பில் அவர் அவ்வாறு சொன்னார்.

கூட்டணித் தலைமைத்துவம் மாறியிருப்பதால், மீண்டும் தொண்டர்களிடம் கருத்துக் கேட்பது தவறில்லை; அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என விக்னேஸ்வரன் கூறினார்.

மற்றபடி, பாஸ் கட்சி தீவிரமாத கட்சி என்ற கண்ணோட்டத்தில் எல்லாம் முடிவில் தாமதம் காட்டப்படவில்லை என்றார் அவர்.

அண்மையில் கூடிய ம.இ.கா மத்திய செயலவை, தற்போதைக்கு தேசிய முன்னணியிலேயே நீடிக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!