
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-25-பினாங்கு ஜோர்ஜ்டவுன், ஜாலான் கெலாவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், 33 வயது ஆடவரை கத்தியால் சரமாரியாக வெட்டியது.
இன்று காலை சந்தேக நபர்கள், அக்கட்டடத்தின் lobi முன்பாக அந்நபரை தாக்கி விட்டு, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
அவசர சிகிச்சைக்காக அவர் பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, தாக்கிய கும்பலைப் பிடிக்க போலீஸார் வலைவீசியுள்ளனர்.
கருப்பு உடையிலிருந்த இரு தாக்குதல்காரர்கள் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக வெட்டுவதும், மேலுமிருவர் மோட்டார் சைக்கிளில் காத்திருப்பதும் வைரலான வீடியோவில் தெரிந்தது.
அதில், வெட்டப்பட்டவர் தலை மற்றும் கைகளில் இரத்தம் சிந்தியபடி காணப்பட்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் விசாரணைக்கு உதவுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.



