ஜார்ஜ்டவுன், செப்டம்பர் 10 – 76 சதவிகிதம் முஸ்லீம் அல்லாத நிறுவனங்களும்,24 சதவிகிதம் முஸ்லீம் நிறுவனங்களும் பினாங்கில் ஹலால் சான்றிதழுடன் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறு, சிறு, நடுத்தர, பன்னாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆகிய 462 முஸ்லீம் அல்லாத நிறுவனங்களும், 139 முஸ்லீம் நிறுவனங்களும் இதில் அடங்கும் என பினாங்கு மாநில இஸ்லாமிய மத கழகத்தின் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹமீட் (Datuk Mohamad Abdul Hamid) தெரிவித்தார்.
பூமிபுத்ரா வர்த்தகர்களின் சதவீதத்துடன் ஒப்பிடும்போது பூமிபுத்ரா அல்லாத வர்த்தகர்கள் அதிக சதவிகிதம் ஹலால் சான்றிதழ் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதை தரவு காட்டுவதாக அவர் கூறினார்.
இதன் மூலம் மலேசியாவின் ஹலால் சான்றிதழை மத அல்லது இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் நம்புவதை நிரூபிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைத் தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக, 90 நாட்களிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் ஹலால் சான்றிதழ் கிடைக்கும் செயல்முறை முடுக்கி விடப்பட்டப்படுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.