லீமா, நவம்பர்-14, பிரதமர் என்ற முறையில் லத்தின் அமெரிக்க நாடான பெருவுக்கு முதல் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘El Sol del Peru’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பெரு அரசாங்க மாளிகையில் அதிபர் Dina Ercilia Boluarte Zegarra, அன்வாருக்கு அவ்விருதை வழங்கி சிறப்பித்தார்.
ஆங்கிலத்தில் The Sun of Peru என்றழைப்படும் அவ்விருதானது, அரசத் தந்திர உறவை வலுப்படுத்தும் விதமாக வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதமர்கள், அதிபர்கள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுவதாகும்.
APEC எனப்படும் ஆசியப் பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளின் 31-வது உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அன்வார் பெரு சென்றுள்ளார்.
பெரு தலைநகரான லீமா, 2008, 2016-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த APEC மாநாட்டை ஏற்று நடத்துகிறது.