
சோலோ, இந்தோனேசியா, மே 27 – இந்தோனேசியா சோலோவிலுள்ள பிரபலமான வறுத்த கோழி உணவகமொன்றில் பன்றியின் கொழுப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்ட எண்ணெய் பயன்பாடு இருப்பதையறிந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளர் ஒருவர், அவ்வுணவகத்தின் சமையல் பட்டியலில் ‘ஹலால்’ குறியீடு இல்லாததைத் தொடர்ந்து புகார் அளித்துள்ள நிலையில், உணவகத்தின் உரிமையாளர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்கள் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையோர் முஸ்லீம் அல்லாதவர்கள் என்று தெரிவித்த அவர் நடந்த குழப்பங்கள் அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.
இருப்பினும், ஹலால் அல்லாத உணவு முறையை அம்பலப்படுத்திய சம்பவம், அந்த புகழ்பெற்ற உணவகத்தின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிப்பதோடு, முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.