
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனது குடும்பம் சூனியத்தால் குறிவைக்கப்பட்டதாக நம்பிய தந்தை ஒருவர், அது உண்மையில் தனது குழந்தையின் பள்ளி கலைத் திட்டம் என்பதை அறிந்து பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்.
இச்சம்பவத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துக்கொண்ட அவர், முதலில் பிள்ளையின் கை வேலையை பார்த்து அதனை சூனிய பொம்பை என்று நினைத்து அதனை தூக்கி எறியும்படி மனைவியிடம் உத்தரவிட்டுள்ளார்.
பின்பு தன் குழந்தை தன்னிடம் வந்து, ‘அது என் கலைத் திட்டம்’ என்று கூறிய போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது என்ன மாதிரியான கலைத் திட்டம் என்று கேள்வியும் கேட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக தோன்றிய அந்த பொருள், உண்மையில் ஒரு சிறிய வெள்ளை துணியை மடித்து 3 கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் நகைச்சுவையுடன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
‘டை-டை’ நுட்பம் என்பது சாயத்தில் தோய்த்துப் பிறகு கயிறுகளை அவிழ்த்துவிட்டால், அது இனி சூனியம் போல் தோன்றாது மாறாக அழகாக காட்சியளிக்கும் என்று வலைதளவாசி ஒருவர் கருத்துரைத்துள்ளார்.