Latestமலேசியா

பி.கே.ஆர் அரசியல்வாதி கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம்; 8 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு

ஈப்போ, ஏப்ரல்-14, பேராக், தம்புன் பி.கே.ஆர். தொகுதித் தலைவர் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைத்துப்பாக்கியை ஒத்திருக்கும் ஒரு பொருளைக் காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், 8 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

வைரலான அச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்றவர்களை அடையாளம் கண்டு வருவதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

தாமான் இண்டாவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது; அப்போது சம்பந்தப்பட்ட அரசியல்வாதி கைத்துப்பாக்கியைக் காட்டி தன்னை அங்கிருந்து கிளம்பச் சொல்லி மிரட்டியதாக, புகார்தாரர் கூறியுள்ளார்.

அதிருப்தியடைந்த புகார்தாரர் உதவிக்கு போலீஸை மண்டபத்திற்கு அழைத்ததாகவும், நூர் ஹிசாம் சொன்னார்.

இந்நிலையில் தகவல் தெரிந்த பொது மக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தனது போட்டியாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படுவதை, உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் அரஃபாட் வரிசை முஹமட் (Muhamad Arafat Varisai Mahamad) மறுத்துள்ளார்.

அதுவோர் அரசியல் ஆதாயத்துக்கான அவதூறு என்றும், தமது தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!