
கோலாலம்பூர், ஜூன் 15 – புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பை மினி சூதாட்ட மையமாகவும் இணையவழி சூதாட்ட மையமாகவும் பயன்படுத்திய கும்பலை போலீசார் சோதனை நடத்தி முறியடித்தனர்.
இந்தச் சோதனையில் 21 முதல் 44 வயதுடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 உள்ளூர் ஆண்கள், 2 உள்ளூர் பெண்கள் மற்றும் ஒரு வியட்நாம் பெண் அடங்குவர்.
போலீசார் சூதாட்ட மேசை, சூதாட்ட சிப்புகள், சீட்டுக் கட்டுகள், 4,904 ரிங்கிட் ரொக்கம் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், 10.11 கிராம் கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பினாங்கில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட நபர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



