கோலாலம்பூர், ஜனவரி-18 – கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் ஆபத்தான முறையில் வாகமோட்டிய பெண், அதிகாரிகளைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததன் பேரில் கைதுச் செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில், சோதனைக்காக போலீசார் அப்பெண்ணின் காரை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் நிற்காமல் அவர் தப்பியோட முயன்றார்; போலீசாரிடம் சிக்காமலிருக்க ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களை அவரின் கார் முந்திச் சென்றது.
அப்பெண்ணின் செயலால் ஜாலான் இம்பி, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் விபத்தும் ஏற்பட்டது.
எனினும் போலீஸார் ஒருவழியாக அவரைக் கைதுச் செய்தனர்.
2 நாட்கள் விசாரணைக்குப் பிறகு நேற்று காலை அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக டாங் வாங்கி போலீஸ் கூறியது.
சம்பவக் காணொலி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.