புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்-30, பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உணவுக் கடைப் பணியாளரின் முகத்தில் குத்தி, குப்பைத் தொட்டியின் மூடியால் தலையில் தாக்கிய ஆடவர் கைதாகியுள்ளார்.
மாச்சாங் பூபோக்கில் உள்ள ஓர் உணவகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் முன்னதாக வைரலானது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், 36 வயது சந்தேக நபரை கைதுச் செய்தனர்.
இருவருக்கும் தனிப்பட்ட வகையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வே அச்சம்பவத்திற்கு காரணமென்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாறாக, சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போல் அதுவோர் இனவிவகாரமல்ல என, செபராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹெல்மி ஆரிஸ் (Helmi Aris) தெரிவித்தார்.
மேல் விசாரணைக்காக அவ்வாடவர் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.