
கோலாலம்பூர், மார்ச் 5 – பினாங்கு , மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் அக்னி சிறகுகள் அணியின் ஏற்பாட்டில் தமிழோடு விளையாடுவோம் 3.0 மூன்றாவது அத்தியாயம் மார்ச் 13 ஆம்தேதி காலை 7.மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறவிருக்கிறது.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டி.கே.யூவில் (DK U) தமிழோடு விளையாடுவோம் 3ஆவது புதிர் போட்டி நடைபெறுகிறது.
அரசு பொது உயர்க்கல்வி, தனியார் உயர்க் கல்வி மற்றும் அதற்கு இணையான உயர் கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பதற்காக நடைபெறும் தமிழ் சார் புதிர் போட்டி இதுவாகும்.
மாணவர்களின் தமிழ் அறிவு மற்றும் மற்றும் அவர்களது ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் ஒரு மேடைக் களமான அமையும் இந்த போட்டியில் ஒரு குழுவில் 2 பேர் பங்கேற்கும் வகையில் மொத்தம் 32 குழுக்கள் பங்கேற்பதற்கு அழைக்கப்படுகின்றனர்.
ஒரு குழுவுக்கான நுழைவுக் கட்டணம் 10 ரிங்கிட்டாகும். இப்போட்டியின் மூலம் பெறப்படும் கட்டணம் ஆதரவற்ற இல்லங்களுக்கு நிதியாக வழங்கப்படும் . இந்த புதிர் போட்டியில் கலந்துகொள்வோர் கீழ்காணும் எண்களுக்குத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
யோக பிரியன் மணிமாறன் – 016-410 8723
தினேசன் ரவிச்சந்திரன் – 011-2764 7055