
புதிய அதிர்ச்சி தகவல்; பிப்ரவரி 7 வரை நாட்டில் 10 புதிய காசநோய் கிளஸ்டர்கள் பதிவு
கோலாலம்பூர், பிப்ரவரி 10
பிப்ரவரி 7 வரை மலேசியாவில் காசநோய் அதாவது tibi தொற்றுடன் தொடர்புடைய 10 புதிய கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கிளஸ்டர்களில், சிலாங்கூர் அதிக எண்ணிக்கையுடன் முன்னிலையில் இருப்பதாகவும், அங்கு நான்கு கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளை, ஜோகூரில் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு கிளஸ்டர், 72 வயதுடைய மூத்த பெண் ஒருவரைச் சேர்ந்ததாகவும், அவர் Quran போதகராக இருந்ததாகவும் அமைச்சர் விளக்கினார். இந்த வழக்கில், 903 நெருங்கிய தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக காசநோய் கிளஸ்டர்களின் தற்போதைய நிலை மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் செயலில் உள்ள வழக்குகள் குறித்து, குவாலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Dr Ahmad Yunus Hairi எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, மக்களவையில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.



