Latestமலேசியா

புதிய செயலாளருடன் 3-வது தவணையைத் தொடங்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-17-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், ஆகஸ்ட் 2026 முதல் ஜூலை 2027 வரையிலான தனது மூன்றாவது தவணைக்காலத்திற்கும் தற்போதைய தலைமையையே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதன்படி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தலைவராகவும், செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் துணைத் தலைவராகவும் தொடர்ந்து பதவி வகிப்பர்.

மாநில அரசாங்க பிரதிநிதியாக சிவபாலன் தனபால் புதியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நிர்வாகச் செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிச் செய்யும் நோக்கில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மற்றும் டத்தோ தினகரன் ஜெயபாலன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்றாவது தவணையிலும், இந்து சமய சொத்துக்கள் மற்றும் ஆலயங்களைப் பாதுகாப்பதிலும், கல்வி மற்றும் மக்கள் நல உதவிகளை வழங்குவதிலும் வாரியம் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தும் என, அறப்பணி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்காக ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி உதவியை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!