
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதுச் செய்யப்பட்ட சம்பவத்தை அமைச்சரவை கூட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ.
Albert Tei-யின் மனைவி, MACC அதிகாரிகள் துப்பாக்கி காட்டி, குடும்பத்தினரின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து, வீடியோவை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
MACC இதை மறுத்து, போலீஸில் புகார் அளித்துள்ளது.
ஆக ஒரு கதைக்கு இருவேறு பக்கங்கள் இருக்கின்றன; அவற்றில் எது உண்மை என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதற்கு, சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகள் தான் சரியான ஆதாரம் எனக் கூறிய கோபிந்த, உள்துறை அமைச்சருக்கு அதனைப் பரிந்துரைக்க உள்ளதாகவும் சொன்னார்.
இச்சம்பவம் வெளிப்படையாக விசாரிக்கப்படாவிட்டால், பொது மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என கோபிந்த் எச்சரித்தார்.
லஞ்சம் வழங்கிய புகாரில் Albert Tei நாளையும், நாளை மறுநாளும் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படவிருப்பதை MACC இன்று உறுதிப்படுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



