
புது டெல்லி, ஏப்ரல்-20, இந்தியா, புது டெல்லியில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 சிறார்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 11 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் ஐவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் தங்கியிருக்கும் பகுதியில் இன்று அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
கட்டடம் சரிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
என்றாலும், ஊராட்சி மன்றங்களில் நிலவும் லஞ்ச நடைமுறையே இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம் என, டெல்லி அமைச்சர் கபில் மிஷ்ரா குற்றம் சாட்டினார்.
பணம் வாங்கிக் கொண்டு தரக்கட்டுப்பாடு எதுவுமின்றி இதுபோன்ற சட்டவிரோதக் கட்டட நிர்மாணிப்புக்கு அனுமதி வழங்குகிறனர்.
கடைசியில் அப்பாவி மக்களின் உயிரே போகிறது; இது நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
அந்த 4 மாடிக் கட்டடம், முன்னதாக ‘அடுக்கி வைத்த அட்டைகள்’ போல சரிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.