புத்ராஜெயா, ஆகஸ்ட் 29 – 67ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், விதிகளை கடைப்பிடிக்கவும் நினைவூட்டப்படுகிறார்கள்.
நாளை மாலை 6 மணி முதல் பிரதான சாலைகள் மூடப்படவுள்ளதால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு புத்ராஜெயா காவல்துறை உதவி ஆணையர் ஐடி ஷாம் முஹமட் (Aidi Sham Mohamed) அறிவுறுத்தியுள்ளார்.
நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
1,998 பணியாளர்களில், 260 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புத்ராஜெயா நிறுவனம் (Putrajaya Corporation) மற்றும் பிரசரணாவின் (Prasarana) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மொத்தம் 80 பேருந்துகள் இலவசமாக, ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் செயல்படும் என்றார்.
அதேவேளையில், இவ்வாண்டு கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் நீர் டாக்சி சேவையும் ஐந்து இடங்களில் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்பதையும் அவர் கூறினார்.