Latestமலேசியா

பூட்டிய வீட்டினுள் பெண் சடலம்; ஆயர் ஈத்தம் பகுதியில் பரபரப்பு

ஜார்ஜ் டவுன், ஜூலை 19 – இன்று ஆயர் ஈத்தாம் தாமான் தெருபோங் இண்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியொன்றில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து வயதான பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பணியாளர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து அப்பெண்ணை வெளியேற்றியுள்ளனர் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

61 வயது மதிக்கத்தக்க அம்மாது குளியலறையில் மயக்கமடைந்து அவ்விடத்திலேயே உயிரிழந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!