Latestமலேசியா

பூனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகப் புகார்: உடனடி விசாரணைக்கு விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

கோலாலம்பூர், அக்டோபர்-19,ஒரு பூனைக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதைத் தொடர்ந்து, உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என, கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கம் SAFM வலியுறுத்தியுள்ளது.

டிக் டோக்கில் வைரலான அந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறியுமாறு போலீஸ் மற்றும் கால்நடை சேவைத் துறையை அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பூனையைக் கண்டுபிடித்து, அதன் உடல்நிலையைப் பரிசோதித்து, பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் எனவும் SAFM கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பவம் தொடர்பான நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் வைத்திருப்போர் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் மற்றும் 2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!